கோட்டாபயவை உடனடியாக கைது செய்யுங்கள்..!சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம்

Gotabaya Rajapaksa Sri Lankan protests Sri Lankan Peoples Singapore
By Kiruththikan Jul 28, 2022 01:52 AM GMT
Report

அவசர கடிதம்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சீர்திருத்த கட்சியின் செயலாளர் நாயகம் கென்னத் ஜெயரட்ணம் என்பவரே சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வொங்கிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் யுத்தகுற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என இந்த கடிதத்தின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள்

கோட்டாபயவை உடனடியாக கைது செய்யுங்கள்..!சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம் | Letter Attorney General Singapore Gotabaya

ஜெனீவாவில்- ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வருடம் ஆற்றிய உரையில் எங்கள் அரசாங்கம் சர்வதேச நியாயாதிக்கத்தை அங்கீகரித்திருந்தது.கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் உள்ளன.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பெருமளவிலானவை,கொடுரத்தன்மை கொண்டவை. எனவே கோட்டாபய மீது குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான ஆதார தேவைகள் போதியளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு எதிரான குற்றங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் குற்றவியல் முறைப்பாட்டில் காணமுடிகின்றது .அதனை நான் இங்கே மீண்டும் தெரிவிக்க வேண்டியதில்லை.

சிங்கப்பூர் தமிழர்களை அவமதிக்கும் செயல்

கோட்டாபயவை உடனடியாக கைது செய்யுங்கள்..!சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம் | Letter Attorney General Singapore Gotabaya

அந்த குற்றச்சாட்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சரணடைந்த போராளிகள் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும், வேண்டுமென்றே குண்டுவீச்சு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நிலைகள் மீதான எறிகணை வீச்சு, உடல்களை சிதைத்தல் ,பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பாவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

நான் தமிழனாகயிருந்தாலும் சிங்கப்பூர் பிரஜை என்ற அடிப்படையில் எங்களது பன்முக கலாச்சாரத்தை பாராட்டுகின்றேன்,இது சிறுபான்மை இனத்தவர் நல விவகாரம் இல்லை.

கோட்டாபய குடும்பம் சிங்கப்பூரில் தங்கியிருப்பது சிங்கப்பூர் தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். சிங்கப்பூர் தமிழர்களின் உறவினர்கள் பல இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்துள்ளனர்.பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். அல்லது இருந்த சிலவற்றையும் தொலைத்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கோட்டாபய

கோட்டாபயவை உடனடியாக கைது செய்யுங்கள்..!சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம் | Letter Attorney General Singapore Gotabaya

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டாபய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு தப்பி சென்றிருந்தார்.

மாலைதீவிலும் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.

இந்நிலையில் சிங்கப்பூர் அரசு அவருக்கு 14 நாட்கள் பயண அனுமதி சீட்டு வழங்கியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரில் போராட்டம் நடாத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் 14 நாட்கள் பயண அனுமதி சீட்டுக்கான கால எல்லையை அதிகரித்ததுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்