சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை அதிபருக்கான கடிதம்
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி அதிபருக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை பிரதமர் லீ சியென் லொங்க்,தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |