எச்சரிக்கையுடன் கோட்டாபயவுக்கு சென்ற கடிதம் - 14 நாட்கள் காலக்கெடு

warning letter gotabaya P.A.P. Pasnayake Trade Union Confederation of Sri Lanka Civil Servants
By Vanan Nov 15, 2021 11:38 PM GMT
Report

இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எழுதியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க ( P.A.P. Pasnayake) கையொப்பமிட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

நவம்பர் 12ஆம் திகதி, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தனியார் துறையினருக்கு 10,000 ரூபா சம்பள உயர்வைக் கோரினர்.

ஆனால், 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முழு அரச சேவையையும் மறந்து அரச ஊழியர்களையும் பொதுமக்களையும் எண்ணெய் சட்டியில் தள்ளியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க சம்மேளனம், பொருட்களின் விலை உயர்வுக்கு முன்னராக வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது பெறப்படும் ஊதியம் திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

"அரச சேவை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு சராசரியாக 58,000 ரூபாய் செலவாகிறது.”

இந்த அனைத்துக் காரணிகளையும் தோற்கடித்து மீண்டும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரசாங்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க அரச தலைவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மாதம் ஒரு முறை சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் 18,000 ரூபாய் சம்பள உயர்வைக் கோருகின்றனர்.

”இலங்கையின் அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு என்ற வகையில், குறைந்த பட்ச சம்பளம் அல்லது கொடுப்பனவான ரூபாய் 18,000 என்பது முழு அரச சேவைக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இல்லாவிட்டால், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அரச சேவையும் இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவு அரச சேவையை விரிவுபடுத்தியுள்ளதால், அரச சேவைக்கு மேலும் “லொசஞ்ஜர்“ (சலுகை அல்லது சம்பள உயர்வு) வழங்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026