கொழும்பில் குவிந்து கிடக்கும் கடிதங்கள்
தபால் தலைமையகத்தில் ஏராளமான கடிதங்கள் குவிந்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தில் அதிகாரபூர்வமற்ற வேலைநிறுத்தம் நடந்து வருவதாக அவர் கூறினார்.
இதனால், மருந்து விநியோகம் தடைப்பட்டுள்ளது. தபால் திணக்களத்தின் பணிகள் நேற்று (01) தொடங்கியிருந்தாலும், பயணத் தடைகள் நீக்கப்படும் வரை தங்களால் வேலை செய்ய முடியாது என்று தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது தபால் ஊழியர்களை அழைப்பது மிகவும் ஆபத்தானது என்பதால், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அஞ்சல் விநியோக நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும், பல தபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்படும் தபால் நிலையங்களில் வரையறுக்கப்பட்ட சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி அரச வைத்தியசாலைகளில் கிளினிக்களுக்கு செல்லும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் நிலையங்களூடாக விநியோகிக்கும் பணியினை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நிலைமையின் மூன்றாம் பரவலுடன் நாடளாவிய ரீதியில் பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம், விவசாயம்/ மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாது போனவர்களுக்கான சேவை தொடர்பிலும் நாளை திறக்கப்படும் தபால் நிலையங்களில் கவனம் செலுத்தப்படும்.
இது தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், மேலும் தகவலுக்கு 1950 ஹொட்லைனை அழைக்கலாம்.