அரச மாடிக்குடியிருப்புக்களின் உரிமம் தொடர்பில் வெளியான தகவல்
அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமம் தொடர்பிலான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
“இது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.” என்றார்.
அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
காணி உரிமை
மேலும், காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது" மத்திய அரசு திட்டவட்டம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |