குற்றச்சாட்டு நிரூபணம் : ஆறு வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்டது ஆயுள்தண்டனை
06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்ப்பை வழங்கினார். சுதத் பிரசன்னா என்ற பிரதிவாதிக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் காவல்துறையினரால் கைது
2018 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ், கெத்தாராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5.9 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சட்டமா அதிபர் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
குற்றச்சாட்டு நிரூபணம்
நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த குற்றவாளிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |