மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Department of Meteorology
Weather
Rain
Lightning Alert
By Sindu
சீறற்ற வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (06) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (07) அதிகாலை 1.00 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய,ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடி,மழையுடன் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாய் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்