முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மதுபான விருந்து -காவல்துறை எடுத்த நடவடிக்கை
police
arrested
facebook
liquor party
By Sumithiran
குருநாகல் ரம்பாவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட மதுபான விருந்தில் கலந்து கொண்டவர்களில் இருவர் மதுபானங்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விருந்தில் 24 பேர் இருந்தனர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அவர்களில் 22 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுடன் 12 மது போத்தல்ள், பல வெற்று மது போத்தல்கள் மற்றும் ரூ .175,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.