வெளிநாடொன்றில் கேபிள் கார் தடம் புரண்டு பாரிய விபத்து: 15 பேர் பலி
போர்ச்சுகல்லில் (Portugal) கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் உள்ள குளோரியா புனிகுலர் கேபிள் காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கேபிள் கார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கேபிள் கார், மேடான தண்டவாளப் பகுதியில் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கட்டடம் ஒன்றின் மீது மோதியுள்ளது.
கேபிள் கார் செலுத்தும் கம்பி (cable) வலுவிழந்து போனதால் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கேபிள் காரில் சுமார் 40 பேர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் காரில் இருந்தவர்கள் மற்றும் அருகிலிருந்த பாதசாரிகள் ஆகியோர் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, 18 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதில் ஐந்து பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
