மோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
World Economic Crisis
By Pakirathan
உலகில் மிக மோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
உலகின் 157 நாடுகளை உள்ளடக்கி பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங்க் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஸ்டீவ் ஹங்க் வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி, இலங்கையானது 11வது இடத்தில் உள்ளது.
பட்டியல்
வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வர்த்தக நாணய மாற்று வீதம், வருடாந்த தனிநபர் உற்பத்தி வீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் முதலில் இடத்தில் சிம்பாப்வே உள்ளது.
உலகின் மிக மோசமாக சீர்குலைந்த முதல் 15 நாடுகளின் வரிசையில், சிம்பாப்வே, வெனிசியூலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜண்டினா, யெமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டொங்கா, கானா ஆகிய நாடுகள் உள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி