நாடு முழுவதும் எரிவாயு விநியோகிக்க தயார்! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அனில் கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
கையிருப்பில் உள்ள எரிவாயு கொள்கலன்களில் 70,000 எரிவாயு கொள்கலன்கள் கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய பகுதிகளுக்கு இன்று (22) விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் எனவும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும்" எனவும் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
ரணிலின் தீர்மானம்

மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.