மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4910 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு வந்தடைந்தடைந்த கப்பல்
கையிருப்பு தீர்ந்தமையால் லிட்ரோ நிறுவனம் நீண்ட நாட்களாக தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில், 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.
குறித்த கப்பல் நேற்று மாலை கெரவலப்பிட்டியவை சென்றடைந்தவுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக அரச தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 3,740 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் வருகை தரவுள்ளது.
அத்துடன் 3,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக அரச தலைவர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாளை முதல் விநியோகம்
இந்நிலையில், நாளை முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என அரச தலைவர் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் வீடுகளுக்கான எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்.