இலங்கையில் விரைவில் உள்ளூராட்சிசபை தேர்தல் நடத்த வாய்ப்பு!
Election Commission of Sri Lanka
Sri Lanka
Ministry Of Public Security
By pavan
உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இந்த மாதம் 20 ஆம் திகதியின் பின் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த போதிலும் உள்ளுராட்சிக்கு பொறுப்பான அமைச்சரின் தலையீட்டினால் அதனை ஒரு வருட காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்
எனினும், ஓகஸ்ட் 20ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சிசபைக்கான தேர்தலை மீண்டும் நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி