நெருங்கும் உள்ளூராட்சி தேர்தல் : கொழும்பில் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (21) ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கைக்கு எதிராக அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று (18) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
அத்துடன் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
