அடுத்த தேர்தலுக்கு தயார் : தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு
அரசாங்கம் அறிவித்துள்ளபடி எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்பட்டதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தயாரிக்க சுமார் நாற்பது நாட்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல மாற்றங்களை சந்திக்கப்போகும் தேர்தல்
உள்ளுராட்சி சபைத் தேர்தல் புத்தம் புதிய தேர்தல் போன்று இருக்கமாட்டாது எனவும் பல மாற்றங்களைச் சந்தித்த தேர்தலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அறிவித்துள்ளபடி ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தலாம் என தெரிவித்த அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது பயன்படுத்திய அதிகாரிகளை அந்தத் தேர்தலிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |