பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்
துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.
துபாய் காவல்துறையினரால் கைது
இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |