நாடு முழுவதும் அமுலாகியது பயணக்கட்டுப்பாடு
covid
sri lanka
people
lockdown
By Vanan
இன்று அதிகாலை 04.00 மணிமுதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்படும்.
பின்னர் அன்றிரவு 11மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் மீள நடமாட்டத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் விவசாயிகளின் உற்பத்திகளை பகிர்வதற்காக 7 பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்