லொஹான் ரத்வத்த அதிரடி கைது - காவல் நிலையத்தில் விசாரணை
புதிய இணைப்பு
கண்டியில் இன்று (31) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தற்போது மிரிஹான காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (31.10.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
நுகேகொடை, மிரிஹானை பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வெள்ளை நிற "லெக்சஸ்" ரக ஜீப் வண்டி ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 9 மணி நேரம் முன்
