முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடுதலை
கொள்ளுப்பிட்டி (Kollupitiya) சந்தியில் வாகன விபத்தை ஏற்படுத்திய வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய பின்னர், சட்டத்தரணி மற்றும் அவரது கனிஷ்ட சட்டத்தரணியை தூற்றி மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று (20) கொழும்பு (Colombo) – கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபா
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான ஆராய்வின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 10 இலட்சம் ரூபாவை செலுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் லொஹான் ரத்வத்தவின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், கொள்ளுப்பிட்டி வாகன விபத்து வழக்கிலிருந்து லொஹான் ரத்வத்தவை விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்