சிறி லங்கா அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் - லண்டனிலிருந்து சுமந்திரனுக்கு வேண்டுகோள்!
tamil
people
government
M. A. Sumanthiran
By Thavathevan
சிறி லங்கா அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிச் சென்றதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி