சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற லண்டன் பெண்
மருதூர்க் கொத்தன் சர்வதேச சிறுகதைப்போட்டியில் காலவிநோதம் என்ற சிறுகதைக்கு பரிசு கிட்டியுள்ளது.
குறித்த சிறுகதையை லண்டனில் (London) வசிக்கும் படைப்பாளி நவஜோதி ஜோகரட்ணம் எழுதியுள்ளார்.
மருதூர்க் கொத்தன் அறக்கட்டளை மற்றும் இலங்கையின் தேசிய பத்திரிகையான தினகரன் ஆகியன இணைந்து குறித்த சர்வதேச போட்டியை நடத்தியுள்ளது.
சிறுகதை எழுத்தாளர்
இந்த போட்டில் தமிழ்நாட்டின் பிரபல சிறுகதை எழுத்தாளர் அகிலன் கண்ணன் எழுதிய மனுசி என்ற சிறுகதை முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
லண்டன் நவஜோதி ஜோகரட்னம் எழுதிய காலவிநோதம் என்ற சிறுகதை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதனுடன், மட்டக்களப்பு (Batticaloa) செ.குணரத்தினம் எழுதிய நரபலியும் மற்றும் வைத்திய கலாநிதி சி. சிவகலை (ராதா) எழுதிய பிராத்தனை ஆகியன மூன்றாம் இடத்தையும் பகிர்ந்துள்ளன.
இந்த போட்டிக்குரிய பரிசளிப்பு கடந்த வாரம் கொழும்பு ஏரிக்கரை நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
