உக்ரைனின் பாதுகாப்பு: பிரான்ஸ் அளித்த ஒப்புதல்
உக்ரைனுடன் புதிய நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரான்ஸ் இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில், உக்ரைனுக்கு போரிட தேவையான கூடுதல் ஆயுதங்களை வழங்குதல் மற்றும் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ரூ.26,805 கோடி மதிப்பிலான இராணுவ உதவியை அனுப்பி வைப்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
அத்தோடு, இந்த ஒப்பந்தமானது, 10 ஆண்டுகள் நீடிப்பதோடு இராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், வருங்காலத்தில், ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான வழியையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம்
உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அதிபர்களான ஜெலன்ஸ்கி மற்றும் மேக்ரான் இருவரும் அது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஏற்கனவே இது போன்ற ஒப்பந்தம் ஒன்றை ஜெர்மனியுடன் உக்ரைன் ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |