உர தடையை தளர்த்துங்கள் - கோட்டாவிடம் கோரிக்கை வைக்கவுள்ள ஆளும்தரப்பு எம்.பிக்கள்
இரசாயன உரங்கள் மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தில் பொதுஜன பெரமுனவின் 50 க்கும் மேற்பட்ட பின்வரிசை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடலை நடத்துவதாக ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் அளித்த வாக்குறுதியை அடுத்தே இந்த கடித கையளிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரத்திற்கு பதிலாக கரிம உரத்தை அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல முடிவு, ஆனால் அது பின்வருமாறு அமைய வேண்டும். படிப்படியாக கரிம உரங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக இரசாயன உரங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைப்பதன் காரணமாக விவசாயம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் பின் வரிசை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.