ஒரே நாளில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு
உக்ரைனில் போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்ய படைகளுக்கு ஒரே நாளில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய படைத்தரப்பில் 880 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 25 பீரங்கி அமைப்புகள் மற்றும் 19 கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட காலத்திற்குள் ஏற்பட்ட இழப்பு
கடந்த 24 பெப்ரவரி 2022 தொடங்கிய போரில் இருந்து தற்போது 8 மார்ச் 2024 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.[அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் அண்மைய இழப்புகளைக் குறிக்கின்றன]
422,310 (+880) இராணுவ வீரர்கள்; 6,706 (+11) தாங்கிகள் 12,798 (+19) கவச போர் வாகனங்கள்; 10,375 (+25) பீரங்கி அமைப்புகள்; 1,011 (+2) பல ஏவுதல் ரொக்கெட் அமைப்புகள்; 704 (+3) வான் பாதுகாப்பு அமைப்புகள்; 347 (+0) நிலையான இறக்கை விமானம்; 325 (+0) ஹெலிகொப்டர்கள்; 7,998 (+35) உத்தி மற்றும் தந்திரோபாய யுஏவிகள்; 1,919 (+0) கப்பல் ஏவுகணைகள்; 26 (+0) கப்பல்கள் மற்றும் படகுகள்; 1 (+0) நீர்மூழ்கிக் கப்பல் 13,598 (+66) வாகனங்கள் மற்றும் டேங்கர்கள்; 1,656 (+9) சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |