இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை: நானே சாட்சி - கஜேந்திரகுமார் எம்.பி

Tamils Gajendrakumar Ponnambalam Mahinda Rajapaksa Rajapaksa Family
By Thulsi Oct 09, 2025 05:12 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்திற்கு விற்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள்

சர்வதேசத்திற்கு விற்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள்

மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர் நிறுத்தம்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இருந்துள்ளனர்.

இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை: நானே சாட்சி - கஜேந்திரகுமார் எம்.பி | Ltte Does Not Want People To Die In Final War

அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அப்போதைய நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத நிலையில் பசில் ராஜபக்சவுடன் பேசுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் என்னுடன் பேசினார்கள்.

எமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் அந்த செய்தியை உரிய தரப்பினரிடம் கொண்டு போய் சேர்க்குமாறு என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.

அதன் பிரகாரம் பசில் ராஜபக்சவிடம் குறித்த செய்தியை கொண்டு போய் சேர்த்தேன். 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு வருகை தந்ததும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் நான் பேசிய விடயங்கள் தொடர்பில் இணங்கப்படும் என்றார்.

அந்த இணக்கப்பாட்டுடன், மறைந்த மன்னராயர் இராசப்பு யோசப் மற்றும் கிங்சிலி ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு சென்று மக்களை அழைத்து வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்

இராணுவம் இனப்படுகொலை

இந்த விடயங்கள் மே மாதம் 16ஆம் திகதி இரவு 8 மணி அளவில் பேசப்பட்டது. ஆனால் நிலைமைகள் மாறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருந்த மக்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. இதற்கு நானே சாட்சி.

விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் தான் என்னுடன் தொடர்பு கொண்டார்கள், ஏனெனில் அரசியல் கலக்காமல் சில விடயங்களை அவர்கள் கையாள முனைந்திருக்கிறார்கள் அது சாத்தியப்படவில்லை.

இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை: நானே சாட்சி - கஜேந்திரகுமார் எம்.பி | Ltte Does Not Want People To Die In Final War

என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க உரிய தரப்பினரிடம் விடயங்களை கொண்டு போய் சேர்த்தேன், ஆனால் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் புலிகள் இறுதி யுத்த களத்தில் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை.

அவர்கள் என்னுடன் பேசிய மே 16 அம் திகதி தொடக்கம் இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான பொதுமக்களுக்கு நானே சாட்சி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மகிந்தவின் மத்தள விமான நிலையத்தின் கதி - அரசின் முக்கிய தீர்மானம்

மகிந்தவின் மத்தள விமான நிலையத்தின் கதி - அரசின் முக்கிய தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026