உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடிக்கு வாய்ப்பு
உலகின் முக்கிய பொருளாதார வலு நாடுகள் ரஷ்ய மசகு எண்ணெய்க்கு விலை வரம்பை விதித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இன்று உலக சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெய்க்கான விலை உயர்ந்துள்ளது.
ரஷ்ய மசகு எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பு கொள்கைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து மசகு எண்ணெய் விற்பனை செய்யப்படமாட்டாதென அறிவித்துள்ள அதன் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், இதன் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து தினசரி 5 இலட்சம் பீப்பாய் உற்பத்தி குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ப்ரெண்ட் மசகு எண்ணெய்
ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் நெருக்கடிகள் எதிர்பார்க்கப்படுவதால் இன்று உலக சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெய்க்கான விலை 2.7 வீதத்தால் உயர்ந்து ஒரு பீப்பாய் 86 டொலராக பதிவாகியுள்ளது.
தினசரி 5 இலட்சம் பீப்பாய் உற்பத்திக்குறைப்பு என்பது ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 5 வீதத்துக்கு சமனானதாகும் சவூதி அரேபியாவை உள்ளடக்கிய ஒபெக் பிளெஸ் எனப்படும் ஒபெக் நாடுகளுக்கு மேலதிகமான இருக்கும் எண்ணெய உற்பத்தியாளர்களின் குழுவைக் கலந்தாலோசிக்காமல் ரஷ்யா தனது உற்பத்தியைக் குறைக்கும் முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்த்ககது.
உக்ரைனிய போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவில் நிதிவலுவையை குறைக்கும் வகையில் அதன் எண்ணைய் விலைக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.