காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாகவும், அதற்கு சில காவல்துறையினர் ஆதரவு வழங்குவதாகவும் மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு காவல் நிலைய சிறைக்குள் உறங்குவதற்காக மெத்தை வழங்கப்பட்டதாகவும் அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொக்குவில் காவல்துறை
'கொக்குவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட திராய்மடு மற்றும் கொக்குவில் பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களுடன் சில காவல்நிலைய உத்தியோகத்தர்களுக்குத் தொடர்பு காணப்படுகிறது.
இதேவேளை, பெண் ஒருவர் மீது அத்துமீறல் செய்ய முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும், போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு காவல் நிலைய கூண்டில் நித்திரை செய்வதற்காக மெத்தை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 75க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு வீடுகளை வழங்குவதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |