ஸ்ரீலங்காவில் குடும்ப அரசியல்! பிரதமராகும் நாமல்? சுமந்திரன் கடும் தாக்கு
covid
sri lanka
jaffna
ma sumanthiran
By Vanan
ஸ்ரீலங்காவில் காணப்படும் மோசமான குடும்ப அரசியலினால் நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். கந்தர்மடம் அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், குடும்ப அரசியல் பிணக்குகளினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை அரசாங்கம் உரிய முறையில் கையாளத் தவறியதன் காரணமாகவே 3 ஆம் அலை வேகமாக பரவி வருவதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்