தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka M. K. Shivajilingam Indo Sri Lanka Accord ITAK
By Sathangani Dec 21, 2024 09:04 AM GMT
Report

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (21) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

அநுரவின் இந்திய விஜயம் 

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா (India) செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை.

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம் | M K Sivajilingam Calls On Tamil National Parties

ஜனாதிபதி அநுர (Anura) இந்தியாவிற்கு சென்று பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் (Indo-Sri Lanka Accord) ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை.

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி - கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி - கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய அரசு

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை.

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம் | M K Sivajilingam Calls On Tamil National Parties

முதல் தடவையாக இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசு பதவி ஏற்றிருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்பட்டு வருகிறார்கள்.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமையை முன்வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயற்பட முடியாது.

எனவே அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும்.

அரச சேவை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச சேவை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

நீதிமன்றத்தை நாடியுள்ள தமிழரசுக்கட்சி

2013 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து அதனை உறுதியுடன் செயற்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது.

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம் | M K Sivajilingam Calls On Tamil National Parties

அதேபோன்று தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK) 75 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

எனவே அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும்“ என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து எம்.பிக்கள் பெற்ற பணம்: தயாசிறி கடும் சீற்றம்

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து எம்.பிக்கள் பெற்ற பணம்: தயாசிறி கடும் சீற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016