மாணவிகளிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி அத்துமீறல்: விரிவுரையாளர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Arrest
By Farook Sihan Oct 02, 2026 07:24 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அடடாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஆசிரியர் கலாசாலை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

மாணவிகளிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி அத்துமீறல்: விரிவுரையாளர் கைது | Lecturer Arrested For Harassing Female Trainees

இதன் காரணமாக தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளதாகப் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்!

2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்!

பயிற்சி மாணவிகள் 

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட காவல்துறை குழுவினர் நேற்று (01-10-2026) சந்தேகநபரான குறித்த விரிவுரையாளரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (02-10-2026) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மாணவிகளிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி அத்துமீறல்: விரிவுரையாளர் கைது | Lecturer Arrested For Harassing Female Trainees

அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை  அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிகாட்டலிலும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே, பதில் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் கே.டி.பி. தரங்கா, காவல்துறை சார்ஜென்ட் வீரசிங்க (37387), காவல்துறை கொன்ஸ்டபிள் சந்திகா (12830), பெண் காவல்துறை சார்ஜென்ட் துஷாரி (3573) மற்றும் பெண் காவல்துறை கொன்ஸ்டபிள்களான உஷானி (10237), சச்சினி (10686) ஆகியோர் அடங்கிய விசேட காவல்துறை குழுவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2027 டயர்களுக்கான புதிய இறக்குமதி தரநிலைகள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனவரி 2027 டயர்களுக்கான புதிய இறக்குமதி தரநிலைகள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022