நல்லூரில் திலீபனின் சிலை வைத்த விவகாரம் : எட்டு பேரிடம் வாக்குமூலம் பதிவு
யாழ்ப்பாணம் - நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது உருவாச்சிலையை வைத்தமை தொடர்பில் சுமார் எட்டு பேரிடம் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் புதிதாக திலீபனின் சிலை ஒன்று வைக்கப்பட்டது.
குறித்த சிலையானது கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாண காவல்துறையினரால் உடைத்து எடுத்துச்செல்லப்பட்டது.
வாக்குமூலம் பதிவு
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஆறு பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது.

குறித்த வாக்குமூலங்களை பெற்ற யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் இன்றைய தினம் (02) வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |