ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் 6.2 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது,
சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு
மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்