லண்டனில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
London
United Kingdom
Maaveerar Naal
By Harrish
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர் தாயகத்தின் மீட்சிக்காக போராடி தன் உயிர்நீத்த மறவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்றைய தினம் (27.11.2024) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில்(London) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் ஆரம்பமாக, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்தின பாடல் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
நினைவஞ்சலி
இதையடுத்து, மாவீரர்களை நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மக்கள் வரிசைக்கிரமமாக சென்று தேசப்புதல்வர்களை நெஞ்சில் நிறுத்தி மலர்தூவி, சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 15 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி