கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல்! (படங்கள்)

Sri Lankan Tamils Sri Lanka
By Beulah Nov 27, 2023 05:10 PM GMT
Report

சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல் ஐயன்கன்குளம் பகுதியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

முல்லைத்தீவு துணுக்காய் - ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால் நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 16ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இத் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கொட்டும் மழைக்கு மத்தியில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

இவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உயிரிழந்த மாணவ செல்வங்களின் நினைவிடத்தில் இடம்பெற்றது.

கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல்! (படங்கள்) | Maaveerar Naal 2023 Update

நோயாளர் காவுவண்டியில் பாடசாலை சீருடையுடன் பயணித்த மாணவிகளான - "நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்களான சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21)" ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நினைவு நிகழ்வில் பொது சுடரினை சம்பவத்தில் பலியான மாணவிகளில் தந்தை ஏற்றி வைக்க சம நேரத்தில் ஏனைய உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.

குறித்த பகுதியை சூழ இராணுவம் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகது.

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்!

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்