சம்பூரில் கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து நினைவஞ்சலி
புதிய இணைப்பு
சம்பூர் - ஆலங்குளம் துயிலுமில்லத்தில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
சீரற்ற காலநிலையையும் பொறுப்பெடுத்தாது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தீபச்சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.
இதன்போது மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டது. இதன் பின்னர் பிரதான தீபச்சுடரை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தீபங்களை ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.
முதலாம் இணைப்பு
தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த மறவர்களை உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும், இயற்கை இடர்பாடுகளைத் தாண்டியும் இன்றைய (27.11.20214) நாளில் மாவீரர்களை அஞ்சலிப்பதற்குத் தமிழர் தாயகம் தயாராகியுள்ளது.
வீதிகள் எங்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. மாவீரர் அலங்கார வளைவுகள் மிடுக்குடன் அமைக்கப்பட்டுள்ளன.
மாவீரர்நாள் நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கோப்பாய் (Kopay), கொடிகாமம் (Kodikamam), எள்ளங்குளம், உடுத்துறை, சாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன.
மேலும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், ஏராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகியுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவாலயங்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் முல்லைத்தீவுக் கடற்கரை, இரட்டை வாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அலம்பிள், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளமம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுல் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.
அதேபோல் வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (Ampara) மாவட்டங்களிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவாலயங்கள், மாவீரர் நினைவிடங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |