மட்டு வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் உட்பட 4 பேர் கைது..!
மட்டக்களப்பு வவுணதீவு காவல்நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் மற்றும் சோடனை கொடிகளை வாகனத்தில் எடுத்துச் சென்றவர் உட்பட 3 பேரை இன்று திங்கட்கிழமை (27) மாலை 6.10 க்கு கைது செய்துள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிப்பதற்கா மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் சம்பவதினமான இன்று மாலை எடுத்துச் சென்ற நிலையில் அந்த பகுதியில் நடமாடும் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மற்றும் கம்பிகள் இருப்பதை கண்டு வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனத்தையும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியேர் காவல் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட சாரதியை பார்த்துவிட்டு 6.5 மணியளவில் காவல் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றயதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிதுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்