இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் (படங்கள்)
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிகப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வளாகத்திற்கான வளைவு பதாதையில் மாவீரர் என்ற பெயர் பதிக்ககூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்க அமைய அங்கு மாவீரர் துயிலும் இல்ல பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நினைவுச்சுடர்கள்
இந்த நிலையில் இரணைப்பாலை துயிலும் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர பெருமளவான மக்கள் இன்று (27) மாலை ஒன்று திரண்டார்கள் பொதுச்சுடரினை இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் முதல் விதைத்த மாவீரர் இசைஞானி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க தொடர்ந்து சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக நினைவுச்சுடர்களை பெற்றோர்கள் உறவினர்கள் ஏற்றிவைத்துள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |











அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்