கூட்ட நெரிசலால் மடகஸ்காரின் தலைநகரில் 12 பேர் பலி
By Kathirpriya
மடகாஸ்கரின் தலைநகர் அன்தனன் ரிவோ-வில் உள்ள விளையாட்டரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 12 பேர் நசுங்கி உயிரிழந்ததுடன்,80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கு 11 வது இந்தியப் பெருங்கடல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய போது விளையாட்டு மைதானத்தில் புக முயன்ற மக்களிடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்ட்டியன் உறுதி செய்துள்ளார்.
நேரில் சந்தித்துப் பேசியதாக

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை அவர் நேரில் சந்தித்துப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்த 80 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்