அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதீஷ!
உலகக் கிண்ண T20 அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க, பினுர பெர்னாண்டோ அல்லது நுவான் துஷார இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டதால், மதீஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கான ஓய்வு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தில்ஷான் மதுஷங்க, பினுர பெர்னாண்டோ அல்லது நுவான் துஷார ஆகியோரின் பெயர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்ஷான் மதுஷங்க
இதில் தில்ஷான் மதுஷங்கவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகக் கோப்பை அணியில் இருந்த எஷான் மலிங்கா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரும் தற்போது காயங்களால் வெளியேறியுள்ளனர்.
இதன்படி உலகக் கோப்பையின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் அடுத்த ஆட்டம் நாளை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் சிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7