சுப்பர் 8 எதிர்பார்ப்பில் இலங்கை! அவுஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள சவால்
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது, இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் ஷானக்க தலைமை தாங்குவதுடன், அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்தவுள்ளார்.
சுப்பர் 8 சுற்று
இலங்கை அணி இப்போட்டியில் வெற்றியீட்டும் பட்சத்தில், 'பி' பிரிவின் கீழ் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

தற்போது அந்தப் பிரிவின் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.
இந்த நிலையில், சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் அவுஸ்திரேலிய அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |