ட்ரம்பின் அதிரடி வேட்டையில் சிக்கிய மதுரோ பூலோக நரகத்தில்...!
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, பூலோக நரகம் என்றழைக்கப்படும் மிகக் கொடூர சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாக பல நாள்களாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.
அமெரிக்க இராணுவம்
இதையடுத்து, ஜனவரி மூன்றாம் திகதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்தது.
அங்கு தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தியது.

இதையடுத்து, அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பின்பு, கைகள் கட்டப்பட்ட நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மதுரோ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இதன்போது, அவர் குற்றமற்றவர் என தெரிவித்து பிணை கோரினார்.
நீதிமன்றங்களில் விசாரணை
இருப்பினும், மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மார்ச் மாதம் 13 ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மதுரோ நியூ யார்க்கில் இருக்கும் ப்ரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மான்ஹாட்டன் மற்றும் ப்ரூக்ளினில் உள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருக்கும் கைதிகள் வழக்கமாக இந்த சிறையில் அடைக்கப்படுவர்.
பிரபல பாடகர்களான ஆர் கெல்லி மற்றும் டிட்டி என்றழைக்கப்படும் சீன் கோம்ஸ் உள்ளிட்டோரும் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |