மல்லாகம் நீதிமன்றத்தில் மாயமாகிய வழக்கு சான்றுப் பொருள்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Jaffna
By Sathangani
யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
விரிவான விசாரணைகள்
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்றுப் பொருளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்