முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிய சீன தொழிலதிபர்
Crime
Police
Mahawewa
By Vasanth
மஹாவ நகரப்பகுதியில் இரவு நேர கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது கத்தியால் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மஹாவ நகரப்பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நிக்கவரட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் பயன்படுத்திய கத்தியையும் மஹாவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி