பதவி விலக மறுக்கும் சிறிலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்
Mahela Jayawardene
Sanath Jayasuriya
Sri Lanka Cricket
By Sumithiran
சிறி லங்கா கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
உலகக் கோப்பை தொடரில் சிறி லங்கா அணி சந்தித்த தோல்விகள்
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறி லங்கா அணி சந்தித்த தோல்விகள் குறித்து விவாதித்த அவர், ஆட்டத்தின் முன்னேற்றத்திற்கான எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சிறி லங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜயசூரிய
ஜெயவர்த்தனவின் ஒப்பந்த காலம் இன்னும் மூன்று மாதங்கள் உள்ளதாகவும், அவர் ராஜினாமா செய்யத் தயாராக இல்லை என்றும் சிறி லங்கா கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மற்றுமொரு முன்னாள் வீரரான சனத் ஜயசூரிய சிறி லங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி