எனது இதயக்கனி : விவசாய அமைச்சர் வெளியிட்ட தகவல்
தனது இதயக்கனியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்தார்.
மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) மற்றும் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna) ஆகியோரை சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானம் மற்றும் நீதிமன்றின் தடைஉத்தரவு தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தவறாக வழி நடத்தப்படும் மைத்திரிபால சிறிசேன
தற்போது மைத்திரிபால சிறிசேனவை(Maithripala Sirisena) தவறாக வழிநடத்தும் டீலர்கள் குழு ஒன்று இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அந்த டீலர்கள் பல்வேறு பொய்யான உண்மைகளை சிறிசேனவிடம் முன்வைக்கின்றனர் என்றார்.
"சர்வதேச சமூகம் கேட்கும் தலைவர் நீங்கள்தான், நாட்டில் மிகவும் பிரபலமான தலைவர் நீங்கள்தான், நீங்கள் மீண்டும் அதிபராகலாம்" போன்ற பொய்யான தகவல்களை சிறிசேனவிடம் வழங்கும் குழு ஒன்று இருப்பதாக அமைச்சர் கூறினார்.
தேர்தலில் வெற்றியீட்ட முடியுமா
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்ட முடியுமா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் அமைச்சர் சிரித்துக் கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |