மகிந்த ராஜபக்சவை சந்தித்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று (07) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நலம் மற்றும் நலம் குறித்து விசாரிக்க அமரவீர அவரை சந்தித்ததாக குறிப்பிடப்படுகிறது.
விஜேராமவில் இருந்து வெளியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, செப்டம்பர் 11ஆம் திகதி விஜேராமவில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்கு சென்றிருந்தார்.
"ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின்னர் அம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்ற அவரை சந்திப்பதற்காக அவரை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் கார்ல்டன் இல்லத்திற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
