மகிந்த - மைத்திரிக்கு வழங்கப்பட்ட அரச காணிகள் : அம்பலப்படுத்திய NPP எம்.பி
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல குற்றம் சாட்டியுள்ளார்.
வீட்டுவசதி அதிகார சபையின் நிலக் கொள்கையின்படி, நாட்டில் வாழும் குறைந்த வருமானம் பெறும் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு ஒரு காணி மாத்திரமே வழங்க முடியும் என்ற கடுமையான சட்ட விதிமுறை நடைமுறையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1999 ஆம் ஆண்டில் அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு ஏக்கர் அரச நிலம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒன்றும் காணி இல்லாத, குறைந்த வருமானம் பெறும் ஏழை என்று நான் நினைக்கவில்லை.
மகிந்தவின் மனைவிக்கு வழங்கப்பட்ட காணி
அதேபோன்று, மகிந்தவின் மனைவிக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில், பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி 'கார்டன் மொண்டிசோரி' என்று கூறப்படும் இடத்துக்கு மற்றொரு பெறுமதிமிக்க அரச நிலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்திற்கு மேலதிகமாக, அதனைச் சுற்றியிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான மேலும் சில பகுதிகளும் அவர்களால் அத்துமீறிப் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என சுதத் பலகல்ல மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |