ஒருபோதும் அது நடக்காது - மகிந்த அறிவிப்பு
பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தமக்கு இல்லை என மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தை சிலர் துஷ்பிரயோகம் செய்கின்றனர். எவ்வாறாயினும், இவ்வாறான நாசகாரர்களால் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள நாட்டிலுள்ள பெரும்பான்மையான புத்திஜீவிகள் தயாரில்லை.
வழங்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வது நியாயமில்லை.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை எனவும், பெரும்பான்மை மக்களின் சம்மதத்துடன் கிடைத்த பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் பசில் ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.