உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை கண்டறிய அவசியமாகும் PTA...!
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் பொது அவசர கால நிலையினையும் நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது எனத் தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றில் இன்று (09-06-2026) உரையாற்றும்போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அவசரகால நீடிப்பு தொடர்பான இன்றைய விவாதத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டம்
குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது விரைவில் குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் பல உயிர்ப்பலிகளை ஏற்படுத்திய மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்காகப் பயன்படுத்தியது ஒரு குற்றமா எனக் கேள்வி எழுப்புகிறோம்.
எனவே இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் தற்போது நடைமுறையில் உள்ள இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அத்துடன் விரைவில் குறித்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்