பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை (முதலாம் இணைப்பு)
சிறி லங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவும் மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் இன்று நீக்கப்பட்டனர்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரி அதிரடி : மூவரின் பதவிகள் பறிப்பு
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் பதவிகளே இன்று (30)பறிக்கப்பட்டுள்ளன.
தேசிய அமைப்பாளர் மற்றும் உபதலைவர்
துமிந்த திஸாநாயக்க கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சர் அமரவீர சிரேஷ்ட உப தலைவராகவும் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |